http://ceylononline.lk/

Ceylon Online News Portal

திங்கட் கிழமை சம்பள பேச்சுவார்த்தை நல்ல முடிவு கிடைக்கா விட்டால் இ.தொ.கா எடுக்கும் முடிவினை அறிவிக்கும். தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை அதற்கு மூல காரணம் அவர்கள் நினைத்தார்கள் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறந்த பின் தோட்டத்தொழிலாளர்களின் ஒற்றுமை பிளவுபட்டுவிட்டது என்று எனவே தான் கம்பனிகளுக்கு தோட்டத்தொழிலாளர்கள் இன்னமும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று இந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு மலையகம் மட்டும் அல்லாது நாடெங்கிலும் உள்ள சமய தலைவர்கள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் சாரதிகள் என பல துறையினரும் ஆதரவளித்துள்ளனர். எனவே தொழிலாளர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவுவதற்கு பலரும் இருக்கிறார்கள் என்பதனை கம்பனிகாரர்கள் உணர்ந்திருப்பார்கள் ஆகவே எதிர்வரும் திங்கட் கிழமை நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன் அவ்வாறு இல்லாவிட்டால் இ.தொ.கா. எடுத்திருக்கும் முடிவினை அறிவிக்கும் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று நோர்வூட் பகுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். ஊடகவியலாளர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் இதன் போது பதிலளித்தார்..
இன்று பலர் சொல்கிறார்கள் அரசாங்கம் சொன்னால் கம்பனிகள் கேட்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்வதனை கேட்பதற்கு கம்பனிகளும் அரசாங்கமும் தாயும் பிள்ளையும் அல்ல அரசாங்கம் தோட்டங்களை சட்டதிட்டங்களின் அடிப்படையில் குத்தகைக்கு கொடுத்துள்ளது ஆகவே முறையாக சட்டதிட்டங்களுக்கு அமைவாகதான் இதனை தீர்க்க வேண்டும்.
அதே நேரம் இதனை ஒரு போராட்டமாக கருத வேண்டிய தேவையோ அல்லது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாக கருத வேண்டிய அவசியமில்லை இது தொழிலாளர்களின் ஒற்றுமையினை கம்பனிகளுக்கு காட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம். ஆகவேதான் இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளித்துள்ளனர்.
தோட்டங்களில் தேயிலை தூளினை கொண்டு செல்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்தது என்பதில் எவ்வித உண்மையும் கிடையாது அதனை நாங்கள் கண்டிக்கின்றோம். ஒவ்வொருவரும் நினைப்பது போல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது பலத்தை காண்பிப்பதற்காக செய்தது என்று நினைப்பதை விட மக்கள் தங்களது ஒற்றுமையினை காட்டியுள்ளார்.. என்று எண்ண வேண்டும். அதை நான் ஏற்றுக்கொள்ள போவதுமில்லை ஒவ்வொரு நாளும் பலர் என்னுடைய தொழிற்சங்கம் பெரிதா என்னுடைய தொழிற்சங்கம் பெரிதா உன் கட்சி பெரிதா என் கட்சி பெரிதா என்று சொல்வது வானத்தை பார்த்து எச்சில் துப்புவதை போன்றது இதில் ஒன்றை மாத்திரம் நான் சொல்ல வேண்டும் இன்று ஒரு பொதுவான நியாயமான விடயத்திற்கு யார் குரல் கொடுத்தாலும் மக்கள் அணி திரள்வார்கள் என்பதனை நிரூபித்து காட்டியிருக்கிறோம். அதே மக்கள் எப்போதும் ஒற்றுமையாகதான் இருக்கிறார்கள் அரசியல் வாதிகள் தான் பிரிந்து இருக்கிறார்கள் என்பதனை இதன் மூலம் தெளிவாகின்றது.
அதே நேரம் கூட்டு ஒப்பந்தம் அடிமை சாசனம் என்று பலர் கூறுகிறார்கள் உலகளாவியில் கூட்டு ஒப்பந்தம் மூன்று வருடத்திற்கு ஒரு முறைதான் நடைபெற்றது ஆனால் இங்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்றது அப்படி இருக்கும் போது இது அடிமை சாசனம் என்று கூறுவது எவ்வாறு அதே நேரம் இன்றுள்ள பல தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் இருப்பதனையே விரும்புகின்றனர் ஏன் என்றால் அதில் சம்பளம் மாத்திரமன்று நலன்புரிவிடயங்களும் அடங்கியிருப்பதனால் ஆகவே நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர்மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேசசபை தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *