இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோவனா ஜோவிச்சை (செர்பியா) போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ரெய்னா அடுத்து ஜப்பானின் குருமி நராவை எதிர்கொள்கிறார்.

