அவசரகால கதவை திறந்து விமான நிலையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெண் பயணி
விமானத்தில் அவசரகால கதவு என்பது விமானம் விபத்தில் சிக்கினால் விமானத்தில் உள்ளவர்கள் விரைவில் வெளியேற உதவும் கதவு. இது திறக்கப்பட்டால் விமானத்தில் இருந்து தரை வரையில் பலூன் விரிக்கப்பட்டுவிடும்.
சமீபத்தில் துருக்கியின் அன்டால்யாவிலிருந்து உக்ரைனின் கியேவ்ற்கு, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (UIA) புறப்பட்டு விமான நிலையம் வந்தடைந்த சில நொடிகளில் ஒரு பெண் பயணி அவசரகால கதவை திறந்ததால் விமான நிலையமே அதிர்ச்சிக்குள்ளானது.
அதன் பின்பு அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் “அவர் விமானத்திற்குள் அதிக சூடாக இருந்ததாகவும் சூட்டை தணிக்கும் பொருட்டு கதவை திறந்து இறக்கையின் மேல் நின்றதாகவும்” விசாரணையில் தெரிவித்தார்
நல்லவேளையாக விமானம் தரையிறங்கிய யாருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை.
விமான நிறுவனம் ஒரு அறிக்கையில்,
பெண் பயணி, விமானத்திற்குள் மிகவும் சூடாக இருப்பதாக புகார் அளித்தபின், அவர் “அவசரகால வெளியேற்றத்தைத் திறந்து இறக்கைக்குச் சென்றார்” என்றும் விமானப் பாதுகாப்பு விதிகள் மற்றும் விமானத்தில் நடத்தைகளை முற்றிலுமாக மீறியதற்காக அவர் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டார்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
