http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனாவுக்கு மத்தியில் மலையகத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றியுடன் நினைவு கூர்ந்து மாட்டுப்பொங்கல் விழா மலையகப்பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.


மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.


இதனை முன்னிட்டு மலையகத்தில் மாட்டுப்பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றன. மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து;. கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து. மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி. கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்தியிருந்தனர். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டனர்.


உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் தாம்பாளத் தட்டுகளில் வைத்து தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழங்கள் நாட்டுச் சர்க்கரை, பால் பொங்கல் ஆகியன பொங்கி எல்லாம் பூஜைக்காக எடுத்து வைத்து தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு இதன் பின் பசுக்களுக்கும் ஆடுகளுக்கும் குடும்பங்கள் புடைச்சூழ பொங்கல், பழங்கள் கால்நடைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *