நோர்வூட் பிரதேசம் மூடப்படுமா சற்று முன் வெளியான தகவல்
பிசிஆர் முடிவின் பின் நோர்வூட் நகரம் தனிமையா இல்லையா முடிவு செய்யப்படும்.
நோர்வூட் பிரதேசசபைத்தலைவர் ரவி குழந்தைவேலு தெரிவிப்பு.
நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தின் கொரோனா தொற்றுக்குள்ளான ஆசிரியருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்காள்ளப்படுகின்றன.இதன் முடிவுகள் கிடைத்தவுடன் நோர்வூட் பிரதேசம் தனிமைப்படுத்த படுமா இல்லையா என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என நோர்வூட் பிரதேசசபைத்தலைவர் ரவி குழந்தைவேலு தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கூட்டம் ஒன்று இன்று (07) மாலை 2.00 அளவில் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் தலைமையில் நோர்வூட் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தற்போது நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதமனை தொடர்ந்து நோர்வூட் நகரத்தின் பல கடைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.இதனால் தப்போது பி.சி.அர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும்,அதனை தொடர்ந்து நோர்வூட் நகரத்தினை கடைகள் மூடுவதா இல்லையா என்பது தொடர்பாக முடிவுகளை எடுக்க உள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நோர்வூட் பிரதேசசபைத் தலைவர்,மஸ்கெலியா பிரதேச மாவட்ட சுகாதார அதிகாரி,டி சந்திரராஜன் பொது சுகாதார பரிசோதகர்கள் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நோர்வூட் வர்த்தக சங்க பிரதிநிதிகள்,உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதே நேரம் நோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்று இன்று (07.12.2020) தற்காலிகமாக மூடப்பட்டது. சுகாதார பாதுகாப்பு நலனைக்கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் பகுதியில் ஆசிரியையொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, இம்மாணவர்களின் பெற்றோர் யாராவது குறித்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனரா என்பதனை கண்டறிவதற்காகவும், அவ்வாறு இனங்காணப்பட்டால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவுமே இன்று தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று மாலை சுகாதார அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் வழமைபோல் தொழிற்சாலை, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் இதுவரையில் 70 பேர் வரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம், அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்று (07.12.2020) வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்ததாலும், வருகை தந்திருந்த மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டுமே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பாடசாலையும் மூடப்பட்டுள்ளது.
இதனால் நோர்வூட் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 90 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ஒரு சிலரே பாடசாலைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையிலேயே அவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர். நோர்வூட் தமிழ் மகா பாடசாலை வளாகம் மற்றும் நோர்வூட் நகரம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.
இதற்கான நடவடிக்கையை நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலு தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர்.
