பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மிகவும் கவலைக்கிடம்
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
இந்நிலையில், அவர் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது
இது குறித்து சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ பாலசுப்ரமணியம் அவர்கள் அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல்நலம் பெற வேண்டும் என எனது
இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி.. லவ் யூ சார்…’ என பதிவிட்டுள்ளார்.
Bala Subramaniam sir . All the strength hope wishes from the bottom of my heart to a speedy recovery n thank u for every song u sang fr me n made special your dil dewana hero prem, Love u sir.
— Salman Khan (@BeingSalmanKhan) September 24, 2020
