http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அனுராக் காஷ்யப் மீது ஹிந்தி நடிகையான பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு

பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப்.  இவர் ‘தேவ் டி, கேங்ஸ் ஆப் வசிப்பூர், பாம்பே டாக்கீஸ், பாம்பே வெல்வெட்” உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இவர் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை டுவிட்டரில் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் “அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்ததாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதனால் தனக்கும், தன் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். தயவு செய்து உதவுங்கள் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டில் அவர் பிரதமர் மோடியையும் டேக் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *