http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் கொரோனா அல்ல; சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வித்தியாசமான பார்வை

2018-ல் உலக சுகாதார அமைப்பால் ஏற்றுக்கொண்டுள்ள நோய் எக்ஸ், கொரோனா தொற்று அல்ல என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நோய் எக்ஸ் மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய், மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது மிகப்பெரிய தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய இதுவரை கண்டறியப்படாத நோய்க்கிருமிகளை கொண்டது என 2018-ல் உலக சுகாதார அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கொடிய கொரோனா தொற்று உலகம் முழுவதும்  பரவிய போது, முதலில்  நோய் எக்ஸ் வந்துவிட்டதோ என்றுதான் விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் கொரோனா ஒரு உலக பேரிடர்,  நோய் எக்ஸ் அல்ல’ என்று கூறினார்.

எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கு தற்போதைய நெருக்கடி நிலையின் பாடங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 56,908 ஆக உள்ள நிலையில், இதுவரை 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *