http://ceylononline.lk/

Ceylon Online News Portal

எனது குடும்பத்திற்கு நேர்ந்த சம்பவம் மிகவும் கொடூரமானது; மனம் திறந்த ரெய்னா

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் போட்டிக்கு போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு எமிரேட்சி எமிரேட்ஸ் சென்ற ரெய்னா திடீரென்று நாடு திரும்பினார். இவரது குடும்பத்தில் ஏற்ப துயர சம்பவம் ரெய்னா நாடு திரும்ப காரணமாக கூறப்பட்டது.

இச்சம்பவம்குறித்து தனது சமூக வலைத்தள பதிவில் மிக  வேதனையுடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் கூறியது:

எனது குடும்பத்திற்கு நேர்ந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. பஞ்சாப்பில் எனது மாமா படுகொலை செய்யப்பட்டார். எனது அத்தை மிகவும் மோசமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் இந்த சம்பவம் எங்களது குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பலத்த காயமடைந்த மற்றுமொரு உறவினரும் துரதிருஷ்டவசமாகமரணம் அடைந்து விட்டார்.

அன்று இரவு என்ன நடந்தது? யார் இந்த கொடூர செயலை செய்தது? என்பது குறித்து சரியாக இன்னும் தெரியவில்லை. பஞ்சாப் பொலிசார் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதைச் செய்தவர்கள் யார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தக் குற்றவாளிகள் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்யாத வகையில் தடுக்க வேண்டும்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *