http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சுற்றுலா பயணிகளுக்கான தடையை இவ்வருடம் இறுதி வரை நீடித்த மலேசியா!

கொரோனா பரவலை  அடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்கு சுற்றுப் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இவ்வருடம் இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின்  மக்களுக்கு  ஆற்றிய உரையில்,

உலகின் பெரும்பாலான நாடுகளில்  கொரோனா நோய்த்தொற்று  வேகமெடுத்துள்ள நிலையில், மலேசியாவில் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் எதிர்கால நலனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை இந்த ஆண்டு இறுதிவரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் கூறினார்.

இதன்போது,  இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற  கட்டுப்பாடுகளும் தொடர்ந்து மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *