http://ceylononline.lk/

Ceylon Online News Portal

 ஒரே நாளில் உலகிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் ! 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 700-ஐ கடந்துள்ளது.

இதேபோல் பாதிப்பு எண்ணிக்கையும் ஒரே நாளில் 75 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொற்றால் பாதிக்கப்பட்டு முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும்.

மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இதேபோல், உலக அளவில் அதிக பாதிப்புகளை கொண்ட 3வது நாடாக உள்ள இந்தியாவின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *