பிரபல வீரர் உசேன் போல்ட் கொரோனாவால் பாதிப்பு
ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தனது 34 வது பிறந்த நாளை ஜமைக்காவில் கொண்டாடினார், இந்த விருந்திற்கு பின் போல்ட் சுகவீனம் அடைந்து கொரோனா தொற்று அறிகுறியுடன் காணப்பட்டதால் அவருக்கு covid-19 பரிசோதனையும் செய்யப்பட்டு அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிறந்த கொண்டாட்டத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மான்செஸ்டர் சிட்டி நட்சத்திர வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மற்றும் பேயர் லெவர்குசென் விங்கர் லியோன் பெய்லி போன்ற விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் போல்ட்டின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன
Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020
