இரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விஷம் வைத்து கொல்ல முயற்சி, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பு
இரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நலல்னி குடித்த தேநீரில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இது குறித்துஅவரது செய்தி தொடர்பாளர் கிரா யர்மைஷ் கூறுகையில்,
இரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நலல்னி சைபிரீயாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானம் மூலம் திரும்பி வரும் வேளையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் டோம்ஸ்க் என்ற இடத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சைபீரியாவின் ஓம்ஸ்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கோமா நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். 
கடந்த பல வருடங்களாக தற்போதைய அதிபர் விளாடிமிர் புதினை விமர்சனம் செய்ததற்காகவும், அரசிற்கு எதிரான போராட்டம் நடத்தியதற்காகவும் பலமுறை தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தப்பட்டார்.
மேலும் 2017 ஆம் ஆண்டு அவரது கண்களில் இரசாயன தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த அதிபர் தேர்தலில், புதினை எதிர்த்தது போட்டியிட தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது

