http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஜப்பான் கப்பலின் இந்திய கேப்டன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த துணைக் கேப்டன் மொரீஷியஸ் அரசால் கைது

மொரீஷியஸ் தென்கிழக்கு கடல் பகுதியில் பவளப் பாறை திட்டில் விபத்துக்குள்ளான ஜப்பான் கப்பலின் இந்தியாவை சேர்ந்த  கேப்டன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த துணைக் கேப்டன்  மொரீஷியஸ் அரசால்  கைது  செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு  பொலிஸ்  அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இரண்டாக உடைந்த இந்த கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.

 இந்த கடல் பகுதி உலகப் பிரசித்தி பெற்ற  பவளப்பாறைகளின் சுற்றுலாத்தலமாகும்.

மொரீஷியஸ் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவும் கச்சா எண்ணெய் கசிவதை தடுக்க உதவிக்குழு அனுப்பியது.

கப்பலில் மீதமிருந்த 3000 டன் கச்சா எண்ணெய் மாற்றப்பட்டது. இருந்தபோதும் ஆயிரம் டன் கச்சா எண்ணெய் படிப்படியாக கடலில் கசிய ஆரம்பித்து  சுற்றுச்சூழல் மாசடைந்த நிலையில்,

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என மக்களின் குற்றச்சாட்டுக்கு ஆளான மொரிசியஸ் பிரதமர் ஜப்பான் கப்பல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *