உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு திரைப்படம் டிஸ்லைக்குகளில் சாதனை
பாலிவுட்நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு சில குறிப்பிட்ட ஹிந்தி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் மீது ரசிகர்களின் கோபம் அதிகரித்துள்ளது.இதை நிரூபிக்கும் விதமாக ஆலியா பட்டின் புது படத்திற்கு அதிக டிஸ்லைக் கிடைத்துள்ளது.
உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு திரைப்படம் டிஸ்லைக்களில் சாதனை புரிந்திருக்கிறது என்றால் அது மகேஷ்பட் இயக்கத்தில் அவரது மகள்கள் பூஜாபட், ஆலியா பட் மற்றும் சஞ்சய்தத் நடித்துள்ள சதக் 2 ஹிந்திப் படத்தின் டிரைலர்.
டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 5 மில்லியன் டிஸ்லைக்குகள் கிடைத்து இந்தியாவில் அதிக டிஸ்லைக் பெற்ற டிரைலராக சாதனையில் பதிவாகியுள்ளது.
இயக்குனர் மகேஷ் பட் மற்றும் அவரது மகள்கள் பூஜாபட், ஆலியா பட் மற்றும் வாரிசு நடிகை, நடிகர்களின் வாரிசு நடிகை மீது ரசிகர்கள் மிகக் கோபமாக உள்ளார்கள்.
சுஷாந்த்தின் ரசிகர்கள் இவர்களை சும்மா விட போவதில்லை என்றே தெரிகிறது
