கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ்- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை
பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் உயிர் பாதுகாப்பு வளையத்தை (bio-secure protocols) தொடர்ந்து தனிமையில் வைக்கப்பட்டுள்ளார், அவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகாமையில் 90 வயதான மூதாட்டியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இதன்பின் தனிமைப்படுத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
ஹபீஸ் ட்விட்டரில் பதிவிட்ட இந்த புகைப்படம், பாகிஸ்தான் அணி தங்கியிருக்கும் ஏகாஸ் பவுலின் ஆன்-சைட் ஹோட்டலுக்கு அருகிலுள்ள கோல்ஃப் மைதானத்தில் எடுக்கப்பட்டது.
Met an inspirational Young lady today morning at Golf course. She is 90+ & & living her life healthy & happily.Good healthy routine 😍👍🏼 pic.twitter.com/3tsWSkXl1E
— Mohammad Hafeez (@MHafeez22) August 12, 2020
