கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்து விமானிகளின் முட்டாள்தனமான முடிவு!
இம் மாதம் ஏழாம் திகதி துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கேரளா வந்த ஏர் இந்தியா விபத்துக்குள்ளானது விமானிகளின் முட்டாள்தனமான முடிவும் ஒரு காரணமென என சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி முன்னாள் உறுப்பினர் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இதில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
விமான விபத்துக்கு மழை, பலத்த காற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக முதல் முயற்சியில் விமானத்தை தரையிறக்க முடியாதபோது, விமானத்தை மற்றொரு விமான நிலையத்துக்கு திருப்பாதது விமானிகளின் தவறு என பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு இதேப்போன்ற மிகப்பெரிய விபத்து இதே விமான நிலையத்தில்
உள்ளானது இங்கே குறிப்பிடத்தக்கது
