http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கேரள விமான விபத்து 17 பேர் பலி; பாதிக்கு மேற்பட்டோர் படுகாயம்

துபாயில் இருந்து நேற்று இரவு கோழிக்கோடு வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பத்து குழந்தைகள் இரண்டு விமானிகள், ஐந்து விமான பணிப் பெண்கள் உட்பட மொத்தம் 197 பேர் இருந்துள்ளனர்.
கோழிக்கோடு அருகே உள்ள இந்த கரிப்பூர் விமான நிலையமானது டேபிள் டாப் எனப்படும் மலைகளுக்கு மேலே அமைக்கப்பட்ட விமான நிலையமாகும். மிகவும் அனுபவம் வாய்ந்த விமானி கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே விமான ஓடுபாதையில் சரியாக விமானத்தை இறக்க முடியும் என்று சொல்லப்படுகின்றது. அதன் இரு முனைகளிலும் செங்குத்தான பள்ளங்கள் அமைந்துள்ளன.
ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று, சறுக்கிக் கொண்டே அருகில் இருந்த, 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து, இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கு கடுமையாக பெய்த மழை ஒரு முக்கிய காரணமாகும்.

விமானத்தின் உடைந்த பாகங்கள் தீப்பிடித்து  எரிந்ததாகவும், இருந்தபோதும் இரண்டாக உடைந்த விமானத்தின் ஒரு பகுதி தெரியாத காரணத்தினால் அதிக உயிரிழப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. விமானத்தின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 50 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *