http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பெய்ரூட் குண்டுவெடிப்பால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி; 4000 பேர் படுகாயம்; குறைந்தது 300,000 மக்கள் இடம்பெயர்வு; போர்க்களம் போல் காட்சியளிக்கும் லெபனான்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இரசாயன கிடங்கில்ஏற்பட்ட பாரிய குண்டு வெடிப்பில் குறைந்த பட்சம் 100 பேர் பலியாகியுள்ளதாகவும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் 300,000 மக்கள் இடம்பெயர்ந்து உள்ளதாகவும் அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு லெபனான் பொருளாதார நிபுணர் பெய்ரூட் ‘முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது’ என்றும், அது ‘ஒரு தேசிய பேரழிவிற்கு அப்பாற்பட்டது’ என்று கூறுகிறார்.

பெய்ரூட்டில் இரண்டு வாரங்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *