இந்திய தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் அடையாளமாக அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில்; இன்று பூமி பூஜை
பல்லாண்டுகளாக நீடித்து வந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்ததையடுத்து அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது இந்திய உச்சநீதிமன்றம். இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.
எனவே ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது.
இந்த அறக்கட்டளையின் முடிவின்படி இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.


