லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இரசாயன கிடங்கில் பாரிய குண்டுவெடிப்பு 78 பேர் பலி 4000 பேர் படுகாயம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இரசாயன கிடங்கில்ஏற்பட்ட பாரிய குண்டு வெடிப்பில் குறைந்த பட்சம் 78 பேர் பலியாகியுள்ளதாகவும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை சரியான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக அரசு முரண்பட்ட அறிக்கைகளை வெளியிடுகின்றது.
ஆரம்பத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு என்றும் தற்பொழுது இரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு என்றும் கூறப்படுகின்றது.
லெபனானின் பிரதமர் ஹசன் டயப் பின்னர் ஒரு அறிக்கையில், கடந்த ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகதாகவும் இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இவையே குண்டுவெடிப்பிற்கு பிரதான காரணம் என
தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு சம்பவ இடத்திலிருந்து 10 கி.மீ (6 மைல்) தொலைவில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்து முழுநகரமும் பேரழிவாக காட்சியளிக்கிறது

