http://ceylononline.lk/

Ceylon Online News Portal

விக்ரம் லேண்டரின் நிலை என்ன? சென்னையை சேர்ந்த என்ஜினீயர் கண்டுபிடிப்பு

இந்தியாவின் இஸ்ரோ  நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உலகிலேயே முதன் முறையாக சந்திரயான்-2 ன் ரோவர் விண்ணில் செலுத்தப்பட்டு இது தனது 48 நாள் பயணத்தை நிறைவு செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி நிலவின் தரையில் இருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் தரையிறங்க முயற்சித்த போது சந்திரயான்-2, லேண்டர் விக்ரமுடன் தொடர்பை இழந்தது. இதற்காக  இந்தியா 978 கோடி ரூபாய் செலவு செய்தது.

இதைத் தொடர்ந்து இதன் காரணங்களை இஸ்ரோவும் நாசாவும் ராய்ந்துகொண்டிருக்கின்றன.  கடந்த காலங்களில் நாசா வெளியிட்ட புகைப்படம் மூலமாக சென்னையை சேர்ந்த என்ஜினீயர்  சண்முக சுப்பிரமணியன் நிலவில் விக்ரம் லேண்டரின் துகள்கள் கிடப்பதை கண்டுபிடித்து இஸ்ரோவுக்கும், நாசாவும்  தெரிவித்த தகவல்களை அடுத்து இதை ஏற்றுக் கொண்ட இந்த இரு நிறுவனங்களும் அவரைப் பாராட்டியது.

இதன்பின் நாசா தொடர்ந்து வெளியிட்ட புகைப்படங்களை வைத்து தற்போது இது தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

விக்ரம் லேண்டர் இன் மிகக்கடினமான தரையிறக்கம் தான் சோதனை தோல்வியில் முடிந்தது என்றும் ஒருவேளை மென்மையான தரையிறக்கம் நடைபெற்றிருந்தால் இது ஒரு மிகப்பெரிய வெற்றி அடைந்து இருக்க வேண்டிய  நிகழ்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சந்திராயன்-2 எவ்வித பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருப்பதாகவும் இது விக்ரம் லேண்டர் இருந்து சில அடி தூரத்தில் உருண்டு விழுந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *