http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மூன்று புதிய கொரோனா நோயாளிகளால் 80,000 சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றும் வியாட்நாம்

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த 100 நாட்களாக எந்த ஒரு கொரோனா  தொற்ற்றாளர்களும் இனங் காணப்படவில்லை.

நேற்று டா நாங்கில் மூன்று உள்ளூர்வாசிகளுக்கு பிசிஆர் பரிசோதனையில்  தொற்று உறுதி  உறுதிப்படுத்தப்பட்ட உடன் அந்நகரத்தில் 80,000  சுற்றுலா  பயணிகளை  வெளியேற்ற  நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டா நாங் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு சுற்றுலா இடமாகும்.

57 வயதான இந்த நோயாளிக்கு சர்வதேச பயண வரலாறு இல்லை என்றும், கடந்த ஒரு மாதமாக டா நாங்கில் வசித்து வருவதாகவும் வியட்நாமின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவருக்கு உறுதி செய்யப்பட்ட பின் அடுத்த நாட்களில் மேலும் 2 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டனர்.
இதன் பின்னர், வியட்நாமின்  பிரதமர் நுயென் ஜுவான் ஃபுக்,  நகரம் முழுவதும் பிசிஆர் சோதனைகள் உடனடியாக பெரிய அளவில் அதிகரிக்கப்பட வேண்டும்  என்றும், 80,000  சுற்றுலா பயணிகளை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கடுமையாக உத்தரவிட்டார்.

மார்ச் மாதத்தில் தனது எல்லைகளை மற்ற நாடுகளுடன் முற்றிலுமாக மூடியது. அதில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதன்முதலாக 400  ஜப்பானிய வர்த்தகர்களை அனுமதித்தது.

மூன்று பேருக்காக 80 ஆயிரம் பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது கடுமையானதாக இருந்தாலும் வியட்நாம் நாட்டின் விரைவான நடவடிக்கை, சுகாதார கட்டமைப்பு , தகவல்தொடர்பு , நோயாளர்கள் உடன் தொடர்பு உள்ளோரை கண்டறியும் வேகம் போன்றவையே அந்நாடு மிகவும் குறைவான  கொரோனா எண்ணிக்கையும் ஒரு உயிர் பலியும் இல்லாமலும் கட்டுப்படுத்த  முடிந்ததாக சுகாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *