நடிகை ரகுல் பிரீத் சிங், 50 சதவீதம் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத் சிங் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் சம்பளத்தை பாதியாக குறைக்க தயாராகி உள்ளார்.

ரகுல்பிரீத் சிங் ஒரு படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி வாங்கி வந்ததாகவும் இனிமேல் ரூ.75 லட்சத்துக்கு நடிக்க முன்வந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன்2, சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
