http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடக்கவுள்ளன.

நியூசிலாந்து அணி கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரில் பங்கேற்றது. கொரோனா காரணமாக சிட்னியில் நடந்த இப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இது கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்கள் இல்லாமல் நடந்த ஒருநாள் போட்டியானது.

தற்போது கடந்த 143 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடக்கவுள்ளது. சவுத்தாம்ப்டன், ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் இங்கிலாந்து, விண்டீஸ் மோதுகின்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் கடைசியாக மார்ச் 13ல் ஒருநாள் போட்டியில் மோதின. இதன் பின் கொரோனா காரணமாக சர்வதேச கிரிக்கெட் முற்றிலும் தடைபட்டது. தற்போது 116 நாட்களுக்குப் பின் மீண்டும்  கிரிக்கெட் துவங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *