லா லிகா கால்பந்து : பார்சிலோனா அணி அபார வெற்றி
லீக் ஆட்டங்கள் முடிவில் ரியல் மாட்ரிட் அணி 34 ஆட்டங்களில் விளையாடி 23 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 77 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடருகிறது. பார்சிலோனா அணி 34 ஆட்டங்களில் ஆடி 22 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 73 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. வில்லார் ரியல் அணியை வீழ்த்தி 3 புள்ளிகள் பெற்றதன் மூலம் பார்சிலோனா கிளப் அணி சாம்பியன் பட்ட வாய்ப்பில் நீடிக்கிறது.
இதற்கிடையில் அடுத்த ஆண்டுடன் பார்சிலோனா கிளப்பில் இருந்து அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி விலக முடிவு செய்து இருப்பதாக வெளியான தகவலை பார்சிலோனா கிளப்பின் தலைவர் ஜோசப் மரியா பார்டோமி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பார்சிலோனா அணியோடு தான் தனது கால்பந்து வாழ்க்கையை முடித்து கொள்வேன் என்று ஏற்கனவே மெஸ்சி பலமுறை தெரிவித்து இருக்கிறார். மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புகிறார். அத்துடன் இந்த கிளப்புடன் தான் தனது கால்பந்து வாழ்க்கையை முடித்து கொள்ளவும் ஆசைப்படுகிறார். அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் எஞ்சி இருக்கின்றன’ என்றார்.
