ஆகஸ்ட் 15 இல் இந்தியா கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்துகின்றதா?

அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள், முதல் உள்நாட்டு கொரோனா தடுப்பூசியை வெளியிட இந்தியா திட்டமிடுகிறது
பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ICMR) இணைந்து கொரோனா தடுப்புக்கு கோவாக்சின் என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இது தற்போது மனிதப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் பல்ராம் பார்க்கவா, பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கோவாக்சின் மருந்தை ஆய்வு செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். இதன் ஆய்வுகள் ஆகஸ்ட் 15க்குள் முடிக்கப்பட்டு, ஆக.15ல் ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, கொரோனா தடுப்பு மருந்து ஆக.15ல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
