பயனாளர்களின் விவரங்களை தர மறுத்த பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்கள்
சீனாவில் கட்டுப்பாட்டில் தன்னாச்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருந்து வந்த ஹாங்காங்கில் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், டெலகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்து வந்தது.
சுமார் 75 லட்சம் மக்கள் வசிக்கும் ஹாங்காங்கில், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீன அரசு கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம். அத்துடன், சீனாவுக்கு நாடு கடத்தவும் சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு ஹாங்காங் அரசு விடுத்த கோரிக்கைக்கு பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தங்கள் பயனாளர்களின் விவரங்களை ஹாங்காங் அரசாங்கத்திற்கும், சட்டம் ஒழுங்கு அதிகாரிகளுக்கு ம் பகிரப் போவதில்லை என்று தெரிவித்தார்.
