http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிரபல தயாரிப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

நடிகர் கோபிசந்த் நடித்த ரணம், ஆண்டரி, யக்னம் உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தனது சகோதரர் பொகுரி பாபுராவுடன் இணைந்து தயாரித்தவர் பொகுரி ராமராவ். ஐதராபாத்தில் வசிக்கும் இவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவருக்கு வயது 65.

ஏற்கனவே பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் மற்றும் கமல்ஹாசன் நடித்த ராஜ்திலக் இந்தி படத்தை தயாரித்த பிரபல இந்தி பட அதிபர் அனில்கபூர் ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *