தனக்குக் கொரோனா தொற்று இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரபலம்

2018-ம் ஆண்டு அம்பரீஷ் மறைவுக்குப் பிறகு, அவருடைய மண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனவர் அவரது மனைவி சுமலதா.
மண்டியா தொகுதியில் கொரோனா அச்சுறுத்தலால் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வந்தார். இதனிடையே தனக்குக் கொரோனா தொற்று இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து, வீட்டுத் தனிமையில் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
ரஜினி, கமல், சரத்குமார், ராதிகா, குஷ்பு, சுஹாசினி உள்ளிட்ட 1980-களின் நடிகர்களுக்கு நெருங்கிய நண்பர் சுமலதா.
