http://ceylononline.lk/

Ceylon Online News Portal

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யாழ். நகர்ப்பகுதியில் நடவடிக்கை

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யாழ். நகரப்பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட செயலக மற்றும் யாழ். மாநகரசபை பிராந்திய சுகாதார திணைக்களங்கள் இணைந்து குறித்த நடவடிக்கைகளை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தன.

இதன்போது யாழ். நகரப்பகுதியில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், வேலையிடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையிலான வகையிலான இடங்களை அடையாளம் கண்டு சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *