http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நோர்வூட் பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இணங்காணப்பட்டுள்ளது.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமுஓயா ஆற்றுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இன்று (16.01.2021) காலை 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலினையடுத்தே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இச்சடலம் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

கடந்த காலங்களில் காணமல் போனதாக தெரிவிக்கப்பட்டு முகநூலில் பகிரப்ப்பட்ட பெண்ணாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.இச்சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேலதிக பரிசோதனைகளையும் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *