தமிழர்களின் பண்டிகையான தை திருநாளினை உலகெங்கும் வாழும் இந்து மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இன்று கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் ஆண்டின் முதல் நாளும் உழவர் திருநாளுமான தமிழர்களின் பண்டிகையான தைத் திருநாளினை உழகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று (14) திகதி கொண்டாடி வருகின்றனர்.
தைத் திருநாளினை முன்னிட்டு ஆலயங்களிலும் வீடுகளிலும் விசேட பூஜைகள் இன்று அதிகாலை இடம்பெற்றன.

மலையக ஆலயங்களிலும் தைப் பொங்கலினை முன்னிட்டு மக்கள் வாழ்வியல் அம்சங்களுக்கு காரண கரத்;தாவாக விளங்கும் சூரிய பகவானுக்கு பால் பொங்கல் படைத்து பூஜை வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கலினை முன்னிட்டு இன்று அதிகாலை சூரிய பகவானுக்கு அபிசேக அலங்கார பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து விநாயகர் பெருமானுக்கு விசேட தைப்போங்கல் பூஜைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு ஆயுள் ஆராக்கியம் வேண்டி விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

சகல பூஜை வழிபாடுகளும் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இடம்பெற்றன.
ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சந்திராநந்த சர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்று பூஜை வழிபாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பக்த அடியார்களே கலந்து கொண்டிருந்தனர்.
வீடுகளிலும் இந்து மக்கள் நீராடி புத்தாடை அணிந்து வாலில் கோலமிட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து சூரினை வழிபட்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

