இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று வெலிசரை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர் மஹர பிரதேசத்தைச் சேரந்த 40 வயதுடைய ஆண் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் கடந்த 23ம் திகதி சுவாச அமைப்பில் நோய்த்தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதவாவது பி.சீ.ஆர் பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதியாகியிருக்கவில்லை எனினும் 31ம் திகதி உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையிலேயே இவருக்கு கொவிட் 19 தொற்று அடையாளங்காணப்பட்டிருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு உறுதிசெய்துள்ளது.
இதுவரை இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 21 நோயாளிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
