பாலிவுட் பிரபலங்கள் பலரும் போதை பொருள் பயன்டுத்துவது தொடர்பாக விசாரணை
பிரபல இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.
கைதான ரியா உள்ளிட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பிரபல பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனேவின் மேலாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ‘தேவைப்பட்டால், தீபிகா படுகோனேவிடமும் விசாரணை நடத்தப்படும்’ என, போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனே செப். 25-ம் தேதியும், நடிகைகள் சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் ஆகியோர் செப் 26-ம் தேதியும் நேரில் ஆஜராகுமாறு போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.

