நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தினமும் இரண்டு ஷிப்டுகள் : நிஜ ஹீரோ அக்ஷய்குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வரும் படம் பெல்பாட்டம். ரஞ்சித் எம். திவாரி இயக்த்தில் வாணிகபூர், லாரா தத்தா, கியூமா குரோஷி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்காட்லாந்து சென்ற படக்குழுவினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து அதன்பிறகே படப்பிடிப்பை தொடங்க அந்த நாடு அனுமதி வழங்கியது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.
படப்பிடிப்பு நடக்காமலேயே தயாரிப்பாளர்கள் தினமும் பல கோடிகள் செலவு செய்ய வேண்டியது இருந்தது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தினமும் 16 மணி நேரம் நடித்து தர தயாரிப்பாளர்களை அழைத்து படப்பிடிப்பை திட்டமிடுமாறும் கூறியிருக்கிறார். மிகுந்த மகிழ்ச்சியில் படக்குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதன் முதலில் 25 கோடியை நிவாரணத் தொகையாக அள்ளிக் கொடுத்தார். மும்பை மாநகராட்சி, மும்பை போலீஸ் உள்ளிட்ட பல துறைகளுக்கு நிதி வழங்கினார்.
பொது வெளியில் மட்டுமல்ல சினிமா உலகிலும் தான் நிஜ ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
