ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும்: சச்சின் நம்பிக்கை
13வது ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதுதொடர்பாக சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன். போட்டி எங்கு நடந்தாலும் எப்போதும் எனது ஆதரவு மும்பை அணிக்கு உண்டு. மும்பை மற்றும் இந்தியன்ஸ் ஒன்றிணையும் போது அது மும்பை இந்தியன்ஸ் ஆகிறது என தெரிவித்துள்ளார்.
