100 தோப்புக்கரணங்களை போட தயாராகும் இந்திய முதல்வர்.
இந்தியாவின் கொல்கத்தா மேற்கு வங்காள மாநிலத்தில் இந்த வருடம் துர்கா பூஜைகள் இல்லை என்று கூறியதனை நிரூபத்தால் தான் 100 தோப்புகரணங்களை பொது மக்கள் முன்னிலையில் போட தயாராக இருப்பதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளன.
அவ் ஊடகம் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கொவிட் 19 தாக்கம் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு புரளிகளை வெளியிட்டு வருகின்றன.ஆனால் இது வரை துர்கா பூஜைகள் பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.ஆகவே மேற்கு வங்காள அரசு கூறியதாக தெரிவித்தால் மக்கள் முன்னிலையில் 100 தோப்புகரணங்களை போட தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
