http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிரபலமான மொபைல் கேம் PUBG உட்பட 100 க்கும் மேற்பட்ட சீன மொபைல் அப் பயன்பாடு தடை; இந்தியா – சீனா பதற்றம் அதிகரிப்பு

பிரபலமான மொபைல் கேம் PUBG உட்பட 100 க்கும் மேற்பட்ட மொபைல் அப் பயன்பாடுகளை இந்திய அரசு புதன்கிழமை தடை செய்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த வேளையில் இந்திய அரசின் இந்த அதிரடி முடிவு மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மொத்தம் 118 மொபைல்அப் பயன்பாடுகளை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை செய்துள்ளதாக ANI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில், 59, சீன, அப் பயன்பாடுகளை இந்திய மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *