முதன் முறையாக சாம்பியன் ஆன இந்தியா! பிரதமர் மோடி வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44வது சீசன் 163 அணிகள் உடன் இணைய மூலமாக நடந்தது. இதன் இறுதிச்சுற்றில் இந்திய அணி, வலிமையான ரஷ்யாவை எதிர்கொண்டது.
இரண்டு சுற்றுக்களாக நடந்தத இருதி சுற்றில் 6 போட்டிகள் நடந்தது. முதல் சுற்றில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளும் சமன் ஆக, 3.0-3.0அடுத்து இரண்டாவது சுற்று நடந்தது. இதில் ஆனந்த், ஹரிகா, விதித் தங்களது போட்டியை ‘டிரா’ செய்தனர்.
ஹம்பி, நிகால் சரின், திவ்யா இணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தோல்வியடைய, இந்தியா 1.5-4.5 என்ற கணக்கில் வீழ்ந்தது.
இந்தியா இணையத்தில் ஏற்பட்ட தடங்களை எதிர்ப்பு அப்பீல் செய்தது.
இதுகுறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு (எப்.ஐ.டி.இ.,) விசாரித்தது முடிவில் சாம்பியன் கோப்பையை இந்தியா, ரஷ்யாவுக்கு பகிர்ந்து தருவதாக, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் அறிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி சாம்பியன் கோப்பை வென்றது இது தான் முதன் முறை.
இந்திய – ரஷ்ய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Congratulations to our chess players for winning the FIDE Online #ChessOlympiad. Their hard work and dedication are admirable. Their success will surely motivate other chess players. I would like to congratulate the Russian team as well.
— Narendra Modi (@narendramodi) August 30, 2020

