பிலிப்பைன்ஸில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 14 பேர் பலி,75 பேர் காயம்
பிலிப்பைன்ஸில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் 14 பேர் பலியானார்கள் மேலும் 75 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் நண்பகல் , மனித நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான ஜோலோ தீவில் உள்ள பிளசா நகரில் உள்ள மளிகைக் கடை முன்பும் அடுத்த ஒரு மணி நேரம் கழித்துஅதே பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிலும்வெடித்தது.
பலியாகியுள்ள 14 பேரில் 7 ராணுவ வீரர்களும் 6 பொதுமக்களும் போலீசாரும் அடக்கம். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதி ஹஸான் சவாஜ்தான் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.


