பத்திரிகையாளரின் முகத்தில் குத்துவதாக அச்சுறுத்திய பிரேசில் அதிபர்
ஞாயிற்றுக்கிழமை பிரேசிலியாவில் உள்ள பெருநகர கதீட்ரலுக்கு வருகை தந்திருந்த பிரேசில் அதிபர் போல்சனாரோ, கதீட்ரலுக்கு வெளியே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகள் அவருக்கு கோபத்தை வரவழைத்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என்று அச்சுறுத்தியுள்ளார்.
குறித்த பத்திரிகையாளர், ஓ குளோபோ பத்திரிகை நிருபர் ஆவார். பிரேசில் அதிபர் மனைவியும் முதல் பெண்மணியான மைக்கேல் போல்சனாரோவுக்கும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும், தற்போது செனட்டராக இருக்கும் அவரது மகன் பிளாவியோ போல்சனாரோவின் முன்னாள் ஆலோசகருமான குயிரோஸ்க்கும் உள்ள தொடர்பு குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். மிகுந்த கோபமடைந்து அதிபர் போல்சனரோ பத்திரிகையாளரை நோக்கி. ‘நான் உங்கள் வாயை குத்துக்களால் உடைக்க விரும்புகிறேன்’ எனக் கூறினார். இதற்கு சக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அவர், சந்திப்பை பாதியிலேயே முடித்து கொண்டு புறப்பட்டார்.

அரசு ஊழியர்களின் ஊதியத்தை மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் சிக்கியுள்ள பிரேசில் அதிபரின் மனைவி இதை பற்றி இதுவரை எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து“பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள்” என்று ஜெனிரோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலெஸாண்ட்ரோ மோலன் ட்வீட் செய்துள்ளார்.
