http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மாலியில் ராணுவ புரட்சி வெடித்தது; அதிபர் மற்றும் பிரதமர் கைது

கடந்த ஒரு மாதங்களாக அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து தலைநகர் பமாகோவில் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றதாகவும், ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம்வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை அடுத்து அரசு கட்டுப்பாட்டை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், மாலியில் ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *