http://ceylononline.lk/

Ceylon Online News Portal

உயிர் காக்க வேண்டிய மருத்துவர், உயிரை எடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி

கடந்த மார்ச் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ்., துணை அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் தம்பதிகளான சாமி வானி மற்றும் ஹீனா பஷீர் பேஹ்
ஆகியோரிடம் இந்திய தேசிய புலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து கர்நாடகாவை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கர்நாடகா பசவன்குடியைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் (28) என்ற மருத்துவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளது.

இம் மருத்துவர் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்ததாகவும் அவர் அவர்களுக்காக ஆயுதம் மற்றும் மருத்துவ செயலியையும் உருவாக்கி வந்துள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *