http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்

பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. டாக்டர்களின் அறிவுரைப்படி, அவர் ஐசியு.,க்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பாதிப்புடன் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.தற்போது அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *