இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு
இந்திய மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு( 55), கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமூக வலைத்தளத்தில் அவரே இதை உறுதிப்படுத்தியுள்ளார்
மேலும் தான் ஆரோக்கியமாக இருந்தாலும் சிகிச்சை மருத்துவர்களின் ஆலோசனையின்படி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் படியும், தனிமைப்படுத்தும்படியும் வலியுறுத்துகிறேன் என அதில் அவர் கூறியுள்ளார்.
