இசைக்கருவிகளை சேதப்படுத்தி இசைக்குறிப்புகளை திருடியது தொடர்பாக இளையராஜா புகார்
பிரபல திரைப்பட தயாரிப்பாளரான எஸ்பி பிரசாரத்திற்கு சொந்தமான பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவிற்கு என்று தனியான இசைப் பதிவுக் கூடம் ஒன்று பல வருடங்களாக இயங்கி வருகிறது. இப்பொழுது எஸ்பி பிரசாத்தின் வாரிசாக பேரன் சாய் பிரசாத் இக்கட்டிடத்தை நிர்வகிக்கின்றார்.
இவருக்கும் இளையராஜாவிற்கும் சில வருடங்களாக ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த கட்டிடத்தை விட்டு விலகுமாறு இளையராஜாவிடம் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவ்வேளையில், ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்ட ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்த இசைக் கருவிகளும் இசைக்குறிப்புகள் திருடப்பட்டுள்ளது பல கோடி ரூபாய் செலவு செய்து, பாடல் பதிவு கூடங்கள் அமைத்தேன். ஏராளமான இசைக் கருவிகள், விலை மதிப்பற்ற, இசைக் குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அனைத்தையும் சேதப்படுத்தி தனக்கு மன உளைச்சலை அதிகரிக்க காரணமான சாய் பிரசாத் மீது கடும் நட நடவடிக்கை வேண்டும் என பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

