http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஆப்கானிஸ்தானைக் காப்பாற்றப் போவது யார்??

உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடான ஆப்கானிஸ்தானை  கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுவிட்டது. நீடித்த  போர்ச்சூழல்,  பொருளாதார முடக்கம்,  இவற்றுடன் கொரோனா பாதிப்பு  இணைந்து நாட்டில் கடும் உணவுத்தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

 மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் அவசர உணவுத் தேவைகளில் உள்ளன. வறுமைக் கோட்டு விகிதமானது 55 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

நோய் தொற்றினால் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்களின் வாங்கும் திறன் குறைகின்றது . நோய்த் தொற்றால் வெறும் 1,300 பேர் மட்டுமே இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் 90  சதவீத மேற்பட்டவர்கள் இன்னும் பரிசோதிக்க படவில்லை என்றே தெரிகிறது. இந்த மானுட பேரழிவிலிருந்து இம்மக்களை யார் காப்பாற்றுபவார்கள் என்று கேள்வி எழும்பியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *