விதைகள் மூலமாக பரவும் உயிரி ஆயுதம் – அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து எச்சரிக்கை
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மூன்று நாடுகளுக்கு தபால் மூலமாக விதை விதைகள் அடங்கிய மர்ம பொதி அனுப்பப்படுகின்றது.
இந்த விதை சிறிய பிளாஸ்டிக் உறையில் வைக்கப்பட்டு மேலே சீன எழுத்துக்களால் எழுதப்பட்டு அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் 28 மாகாணத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிகிறது இதையடுத்து விசாரணையில் இறங்கிய அதிகாரிகள் மேற்கூறிய விதைகள் விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம் என எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 28 மாகாணங்களில் இத்தகைய பற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது .
கனடா மற்றும் பிரிட்டனிலும், இது போன்ற மர்ம விதைகள் கொண்ட பொதி, பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவில், பண்ணை விவசாயத்தில் ஈடுபடும் நபர்களுக்கு, இந்த பொதி அனுப்பப்பட்டுள்ளது. விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம். அதை, நிலத்தில் பயிரிட வேண்டாம் என கனடா உணவு கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
