http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேரிடம் தடுப்பூசி பரிசோதனை; அமெரிக்காவின் மிகப்பெரிய சாதனை

அமெரிக்காவின் தடுப்பூசி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தடுப்பு ஊசியை பரிசோதிக்க பல்வேறு இனத்தினர், பல்வேறு வயதுக்குட்பட்டவர்கள் என்று  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு   செலுத்தி சோதிக்கப்படுகிறது.

 இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதை பரிசோதித்துக்கொள்ள 1,50,000  பேர்  விரும்பி  பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த மருந்து பாதுகாப்பானதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை முதற்கட்ட பரிசோதனைகளில் லேசான பக்கவிளைவுகள் இருந்ததாக கூறப்படுகிறது.  இதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படுவதால் தடுப்பூசிக்கு முக்கிய எதிர்பார்ப்பு நிலவுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *